தலைப்புச் செயதிகள் … ( 05-11-2023)

*ஐந்து மாநில சட்ட சபை தேர்தலில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது .. மிசோரரம் மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் நாளை மறு தினம் வாக்குப்பதிவு.

*பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு … காங்கிரஸ் ஆட்சி செய்த 2014 வரை ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடியாக இருந்தது என்றும் விமர்சனம்.

*கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் 20 நாள் உற்பத்தி நிறுத்தப் பேராாட்டம் தொடங்கியது … மின் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்.

*ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு … பல ஆயிரம் கோடி மதிப்புள்ள துணி உற்பத்தியும் பாதிப்பு.

*மின் கட்டண உயர்வை ரத்து செய்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்… பாஜக சார்பில் வானதி சீனுவாசன் வலியுறுத்தல்.

*பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிச்சோதனை 3 வது நாளாக தொடருகிறது … வருமானத்திற்கு அதிகமான சொத்து மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை.

*சிவில் சர்வீ்ஸ் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் .. உயர் நீதிமன்றம் தயாரித்துக் கொடுத்த விடைத் தாளைக் கொண்டு தேர்வு நடத்தியதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம்.

*மேல்மலையனூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலத்த காயம் … வன விலங்கு வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட குண்டு வெடித்துச் சிதறியதாக தகவல்.

*மணல் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் … கடத்தல் சம்பவத்தை தடுக்க முயன்ற போது தாக்கப்பட்ட அரசு அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டு அறிக்கை.

*திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி நாகாலாந்து மாநில மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என்று இழிவாக பேசுவதாக ஆளுநர் ரவி புகார் … கண்ணியமான மக்களை இழிவு படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள்.

*தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு குறையாததால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 10 ஆம் தேதி வரை விடுப்பு … ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆன் லைனில் வகுப்புகளை நடத்த உத்தரவு.

*காற்று மாசைக் குறைப்பதற்காக டெல்லிக்குள் லாரிகள் போக்குவரத்திற்கு தடை விதிப்பு … வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்டுவதை சில நாட்கள் தள்ளிவைக்குமாறும் வேண்டுகோள்

*கர்நாடகத்தில் சித்தராமய்யாவுக்குப் பதில் டி.கே.சிவக்குமார் முதலமைச்சரானால் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆதரிக்கும் என்று குமாரசாமி அறிவிப்பு … முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட வில்லை என்று சிவக்குமார் பதில்.

*தெலுங்கானா மாநில அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஐதராபாத்தில் தற்கொலை .. போலீஸ் துப்பாக்கியை கொண்டு தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்.

*ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் .. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கணிப்பு.

*ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவிடம் இழக்கக் கூடும் என்று தகவல்… தெலுங்கான மாநிலத்தில் பி.ஆர்.எஸ் கட்சி அதிக இடங்களை வெல்லக்கூடும் என்கிறது கருத்துக் கணிப்பை வெளியிட்ட சி ஓட்டர்ஸ் நிறுவனம்.

*ஐநா மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளையும் மீறி இ்ஸ்ரேல் படைகள் காசா முனை மீது தொடர்ந்து குணடு வீசித்தாக்குதல் .. போர் தொடங்கிய கடந்த 30 நாட்களில் பாலஸ்தீனியர்கள் இறப்பு ஒன்பது ஆயிரத்தை தாண்டியது.

*காசா முனையில் உள்ள அல் மகாதி அகதிகள் முகாமில் பயங்கர குண்டு வெடிப்பு .. போரில் வீடுகளை இழந்ததால் முகாமில் தங்கியிருந்த 52 பேர் இறப்பு.

*உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அபாரம்.. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக பட்சமாக 49 சதம் அடித்து இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தால் கோலி.

*தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிறு என்பதால் சென்னை, மதுரை உட்பட நகரங்களின் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் … துணி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஏரளமானவர்கள் திரண்டதால் போக்கு வரத்து நெரிசல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *