தலைப்புச் செயதிகள் … ( 06-11-2023)

*தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை நாளாக அறிவிப்பு .. அதற்குப் பதில் நவம்பர் 18 வேலை நாள் என்று தமிழக அரசு உத்தரவு.

*ஆளுநர் ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு.. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது என 2 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

*விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும்… மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.

*ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பு அதனை ஆய்வு செய்யவும் நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து .. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் தொடர்ந்து உள்ள வழக்குகளை நவம்பர் 10 ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.

*பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16-க்குப் பின் தமிழ்நாட்டில் இயக்க அனுமதி இல்லை .. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை.

*அரசு பேருந்துகள் உட்பட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் பதிவு செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு .. 2024 செப்டம்பர் வரை பதிவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

*அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் நன்றி.

*ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் குழாய் அமைக்க ஓ என் ஜி சி அனுப்பி உள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் … மண் வளத்தை பாதிக்கும் செயலுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் நீக்கவும் இது வரை ஆறு லட்சம் பேர் விண்ணப்பம் … தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

*அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10 -வது முறையாக நீடிப்பு … நவ.22-ம் தேதி வரை சிறையல் இருக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

* பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4 -வது நாளாக வருமான வரிச் சோதனை… கணக்கில் வராத 28 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.

*சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து… “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” என்றும் அறிவுறுத்தல்.

* திருவேற்காட்டைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில தள்ளுபடி…. “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” என்றும் நீதிபதி கருத்து.

*நாகாலாந்து மாநில மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தல் .. நாகாலாந்து அரசு வழக்கும் பதியும் முன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.

*நாகாலாந்து மக்கள் பற்றி தாம் பேசியதை ஆளுநர் ரவி திரித்துப் பேசுவதாக ஆர்.எஸ். பாரதி விளக்கம் .. தன்னைப் பற்றி விமர்சிக்கும் ரவி கிடப்பில் போட்டு உள்ள கோப்புகளில் கையெழுத்துப் போடலாம் என்றும் கருத்து.

*இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர் விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்த காணொளி உரை புறக்கணிக்கப்பட்டதாக புகார் … நிகழ்ச்சி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பே உரை கிடைத்ததால் ஒளிபரப்ப இயலவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தெண்டைமான் விளக்கம்.

*மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்பதற்கு இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி தரவில்லை .. அமைச்சர் தங்கம் தென்னரசு புகார்.

*மாலத் தீவு நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் … மீனவர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள அபராதத் தொகையை ரத்து செய்யவும் கோரிக்கை.

* ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு… நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு முடிவெடுக்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

* தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திற்குள் 30% ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்.. 9 மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்.

*வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை … சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை.

*நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கல்லார் – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதம்… மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து.

*சனாதன தர்மத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பாலியல் தொழிலாளர்களை குறிக்கும் வேசி போன்ற சொற்கை சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது … ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.

*மிசோரம மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும் சத்தீ்ஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் .. பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு.

*கேரளா மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 61 வயது பெண் உயிரிழப்பு.. இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

*ராஜஸ்தான் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து…விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி; 28 பேர் படுகாயம்.

*நேபாள நாட்டில் மீண்டும் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 5.6 ரிக்டராக பதிவு.. பீகார், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் அதிர்வு.

*இஸ்ரேல், ஹமாஸ் இடையோயான போர் 31 வது நாளாக தொடருகிறது .. இரு தரப்பிலும் உயிரழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

*காசா முனையை வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்க இ்ஸ்ரேல் படைகள் தொடர்ந்து குண்டு வீச்சு.. நேற்று இரவு நடந்த குண்டு வீச்சில் மேலும் பலர் இறப்பு.

*உலக கோப்பை போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்த்தை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு.. 1996 உலகக் கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *