தலைப்புச் செயதிகள் … ( 09-11-2023)

*ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு … திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் மட்டும் செல்லாது என்று அறிவிப்பு.

*எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு … கிரிமினல் வழக்கு விசாரணைகளுக்கு நாடு முழுவதும் ஒரே வித வழிகாட்டு முறையை வகுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து.

*நாடளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதுற்கு தயாராக இருக்க வேண்டும் .. சென்னையில் நடைபெற்ற தென் மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வலியுறுத்தல்.

*தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த பின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தக் கோரிக்கை .. ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாப் சாகு, காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் பங்கேற்பு.

*தமிழ் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் சரக்குப் போக்குவரத்து முடக்கம் .. மோட்டார் வாகனங்களுக்கான காலண்டு வரி 40 விழுக்காடு உயத்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம்.

*அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலி .. சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்சிக் கொடிக் கட்டாத காரில் ஓ.பன்னீர் செல்வம் பயணம்.

*சென்னையில் ஆதரவாளர்கள் உடன் ஒ. பன்னீர் செல்வம் சந்திப்பு … அதிமுக கொடி உள்ளிட்டவைகளை பயன்படுத்த உயர்நீதி மன்றம் தடை விதித்து விட்டது பற்றி ஆலோசனை.

*கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைப்பு .. முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்து மொட்டை அடித்து கொடுமை செய்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை.

*இலங்கை சிறையில் இருந்து 38 மீனவர்களை விடுவித்தது மன்னார் நீதிமன்றம் உத்தரவு .. தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் ராமேஸ்வரம் திரும்பவுார்கள் என்று தகவல்.

*சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது .. அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் முன் பதிவு செய்திருப்பதாக தகவல்.

*மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை செலுத்தும் பணி தொடக்கம் .. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிமை வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

*டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் .. தொழிற் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து.

*தீபாவளி போனஸ் வழங்குவதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் என திமுக அரசு செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் .. அனைத்து துறைகளுக்கும் 20 விழுக்காடு வழங்கிவிட்டு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு மட்டும் 10 விழுக்காடு போனஸ் வழங்கியது ஏன் என்று கேள்வி.

*புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியை களங்கம் செய்தவர்கள் மீது 300 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை .. சென்னையில் பேட்டியளித்த அண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை கூடாது என்பது பாஜகவின் கொள்கை என்றும் விளக்கம்.

*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் 22ம் தேதி வரை நடைபெறும்… 19 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.

*மதுரை செல்லூர் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்டீபன்ராஜை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்… காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதில் ஸ்டீபன்ராஜ் படுகாயம்.

*திருநெல்வேலியில் ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலி .. உதவிப் பொறியாளர் கெளதமன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

*பீகார் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக அதிகரிப்பு .. முதலமைச்சர் கொண்டுவந்த மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்.

*நாடாளுமன்றத்தில் பணம் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்ட புகாரில் மொகூாவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க நடவடிக்கை .. தீர்மானத்தை நிறைவேற்றிய நாடாளுமன்ற நெறிமுறைக் குழு நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்க முடிவு..

*உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் அயோத்தியில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் .. ஜனவரியில் திறக்கப்பட உள்ள ராமகோயிலில் வழிபாடு செய்துவிட்டு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு.

*தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் .. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிப்பு.

*கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகபட்சமாக 23 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது … பல இடங்களில் மண் சரிவு, மலை ரயில் போக்குவரத்து ரத்து.

*தேனி,மதுரை மாவட்டங்களில் பெய்த கன மழை அடுத்து வைகை அணை நிரம்பியது .. கரை ஓரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை. பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு.

*கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விடிய,விடிய பெய்த கன மழையால் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்தது .. தரைப் பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

*கன மழை காரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது .. நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை.

*மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்து அதிகரிப்பு .. டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அணை நீர் மட்டம் உயருகிறது.

*அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 29 ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்ட இந்திய மாணவர் மரணம் .. கொலையாளியை கைது செய்து போலீஸ் விசாரணை.

*காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவிப்பு .. காசாவின் வடக்குப் பகுதி மீது தொடர்ந்து 10 மணி நேரம் குண்டுவீசித் தாக்குதல்.

*நடிகர் கார்த்திக் நடித்த ஜப்பான் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை .. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *