தலைப்புச் செயதிகள் .. ( 13-11-2023)

*வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் … காற்றழுத்த தாழ்வுக் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

*கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாடகளில் கன மழை பெய்யக்கூடும் .. ஏழு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்.

*கன மழை அறிவிப்பால் மயிலாடு துறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு … மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை.

*சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சென்ற அல்லையன்ஸ் ஏர் விமானம் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியவில்லை.. மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

*போராட்டங்களை விதவிதமாக நடத்துவது ஏன்?… நதி நீர் இணைப்பு தொடர்பாக திருச்சியில் 4 வாரம் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி.

*சென்னை அண்ணா நகரில் வேகமாக வந்த கார் மோதியதில் காயம் அடைந்த ஆறு பேரில் இரண்டு பேர் உயிரிழப்பு .. குடி போதையில் கார் ஓட்டியதால் விபத்து நேரிட்டதாக தகவல்.

*சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டின் உணவுப் பொருட்கள் மீது எலி ஓடிய வீடியோ வலை தளங்களில் வைரல் … கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு.

*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வேட்டைக்கு சென்ற போது விபரீதம் .. துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் மரணம்.

*மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மொய்தி சமூகத்தின் ஒன்பது அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதால் தடை விதிப்பதாக விளக்கம்.

*உத்தரகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு சுரங்கபாதை அமைக்கும் பணியில் சிக்கிக்கொண்ட 40 பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடாந்தது.. குழாய் வழியா ஆக்சிஜனை உள்ளே அனுப்பி சுவாசிக்க ஏற்பாடு.

*சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் … மாநிலத்தை ஐந்து ஆண்டுகளாக கொள்ளை அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெறுங்கிவிட்டதாக பேச்சு.

*தெலுங்கானாவில் நம்பள்ளி என்ற இடத்தில் ரசாயண கிடங்கில் தீ விபத்து .. ஒன்பது பேர் உயிழிப்பு.

*பிரிட்டனில் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரவேர்மேனை பதவி நீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவு … பாலஸ்தீன எதிர்ப்பு பேரணிகளுக்கு போலீஸ் அனுமதி தருவதில் அலட்சியமாக செயல்படுவதாக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை.

*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ 467 கோடி மதிப்புக்கு மதுபானங்கள் விற்றதாக தகவல் .. ரூ 104 கோடி விற்பனை உடன் மதுரை மண்டலம் முதலிடம்.

*தீபாவளி முடிந்த மறு நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா மையங்களில் மக்கள் கூட்டம் … சென்னை கடற்கரையில் பல ஆயிரம் பேர் குழந்தைகளுடன் திரண்டனர்.

*தமிழ்நாட்டில் தீபாவளி நாளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த புகாரின் பேரில் இரண்டாயிரம் பேர் கைது .. வழக்குப் பதிவு செய்த பின் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிப்பு.

*சென்னை அருகே கோவளத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா .. ஆறு ஆயிரம் கட்டணம் செலுத்தி ஐந்து நிமிடம் வானில் வட்டமடிக்க மக்கள் ஆர்வம்.

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுகு முதுமை காரணமாக திடீர் உடல் நலக்குறைவு … மருத்துவமனையில் அனுமதி.

*மராட்டிய மாநிலம் நாசிக்கில் டைகர் 3 படம் திரையிடப்பட்ட அரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் … சல்மான் கான் கண்டனம். திரை அரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *