தலைப்புச் செயதிகள் … ( 19-11-2023)

*2023 உலகக்கோப்பையை வெற்றது ஆஸ்திரேலியா…. இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று 6 வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

*241 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்து வெற்றி… ஆஸ்திரேலியா வீரர்கள் ஹெட் 137, லபுஷேன் 58 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

*2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ட்ராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு…137 ரன்கள் குவித்து அஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஹெட்… தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் விராட்கோலி.

*உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கண்ணீர்… கேப்டன் ரோகித் சர்மா கண்ணீருடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

*இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இன்று போல் என்றும் துணை நிற்போம்…. பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்.

*உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில ஹெலிகாப்டர் மூலம் வான் சாகச நிகழ்ச்சி … போட்டியை ரசிக்க இந்திய ரசிகர்கள் நீல நிற உடை அணிந்து மைதானத்தில் திரண்டனர்,

*சென்னயில் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் அகன்ற திரை அமைத்து கிரி்கெட் போட்டி ஒளிபரப்பு.. பெசன்ட் நகர் கடற்கரையிலும் அகன்ற திரையில் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆரவராம்.

*தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் .. திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி திரும்பவும் தமக்கு அனுப்பியது பற்றி சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசிக்க திட்டம்.

*மசோதாக்களுக்கு அனுமதி வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடா்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை .. இதே போன்ற வழக்கில் கடந்த வாரம் பஞ்சாப் ஆளுநருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்த நிலையில நாளைய முடிவை அறிய அனவைரும் ஆர்வம்.

*உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளவர்களை மீட்க ஐந்தாவது நாளாக முயற்சி .. மீட்புக்குழுவுடன் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆலோசனை.

*சுரங்கத்திற்குள் பெரிய குழாய்களை அனுப்பி அதன் வழியே தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் முயற்சி நிறுத்தம் … பாறைகள் சரிவதால் மேலிருந்து துளை போட்டு சுரங்கத்திற்குள் இறங்குவது பற்றி பரிசீலனை.

*சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உட்பட ஒரே மாதிரியான விவரங்கள் கொண்ட 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்ள் பதிவு… இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பதிவுகளை நீக்க மாநகராட்சி அலுவல்கள் திட்டம்.

*தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற கனரக லாரிகள் எல்லையில் நிறுத்திவைப்பு .. பத்து சக்கரங்கள் மேல் உள்ள லாரிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்து உள்ளதால் நடவடிக்கை.

*பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் மு.க.ஸ்டாலின் தவறான கருத்துகளை பரப்புகிறார் .. எடப்பாடி பழனிசாமி புகார்.

*ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு .. இலங்கை கடற்படையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக் கேட்பு.

*திருவள்ளூர் அடுத்து வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு .. கடந்த பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ள மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்.

*கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது .. பாறை சரிவு காரணமாக பத்து நாளாக நிறுத்தப்பட்டு இருந்த ரயி்லின் பயணம் ஆரம்பம்.

*ராஜஸ்தானில் கார் மீது லாரி மோதியதில் போலீஸ்காரர்கள் ஆறு பேர் உயிரிழப்பு .. நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட பாதுகாப்புக்கு சென்ற போது பரிதாபம்.

*முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மலர் வளையம் வைத்து மரியாதை … பிரதமர் மோடி தமது வலைதளத்தில் இந்திராவுக்கு பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செய்வதாக பதிவு.

*பெங்களூரு நகரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதத்த 23 வயது தாய் , ஒன்பது மாத கைக்குழந்தையுடன் சம்பவ இடத்திலேயே இறப்பு .. மின் வாரிய ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்து போலீஸ் விசாரணை.

*காசா முனையில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் படைகள் நுழைந்த பிறகு சவக் கிடங்காகி விட்டது … மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட உலக சுகாதார அமைப்பு உறுப்பினர்கள் கவலை.

*நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சாதனை .. எல் சால்வாடார் நாட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உட்பட 90 பெண்கள் பங்கேற்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *