தலைப்புச் செயதிகள் … ( 20-11-2023)

*நிலுவையில் இருந்த மசோதாக்களை தாங்கள் உத்தரவிட்ட பின் திருப்பி அனுப்பியது ஏன் என்று தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி .. தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்கும் வரை ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் நீதிபதிகள் கண்டனம்.

*சட்டப் பேரையில் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாக்களை ஆளுநர், குடியரசுக்கு தலைவருக்கு அனுப்ப முடியாது … உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில்.

*இது வரை தமக்கு அனுப்பட்ட 181 மசோதாக்களில் 152 –க்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் பதில் … எஞ்சியவற்றில் ஒன்பதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கும் பத்து மட்டுமே நிலுவையில் இருந்ததாகவும் விளக்கம்.

*நன்னடத்தை காரணமாக சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக 580 பரிந்துரைகள் தமிழக அரசிடம் இருந்து வந்தது … 363 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டது, 165 பாந்துரைகள் நிராகரிப்பு, 53 பரிந்துரைகள் நிலுவயைில் உள்ளன என்று ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதில்.

*மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம் .. தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர்களுக்கு எதிரான வழக்குகளை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

*தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து டெல்லியில் முகாம் … தமக்கு எதிரான வழக்கின் அடுத்தக்கட்டம் குறித்து சட்ட நிபுணர்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளதாக தகவல்.

*உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு உணவு, குடி நீர் அனுப்ப ஆறு அங்குல விட்டம் கொண்ட குழாயை உள்ளே செலுத்தியது மீட்புக் குழு … அனைவரையும் பத்திரமாக வெளியில் கொண்டுவருவது பற்றி நிபுணர்கள் குழு ஆய்வு.

*சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க தேவையான உதவிகள் வழங்கப்படும் .. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலை பேசி மூலம் பிரதமர் மோடி உறுதி.

*சென்னையில் குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது நடவடிக்க எடுக்க சி.பி.ஐ.க்கு ஆளுநர் ஒப்புதல் .. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு.

*ஆறுகளில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டது குறித்து அமலாக்கத்துறை விசாரணை…தமிழக அரசின் நீர் வளத்துறை பொறியாளர் முத்தையா நேரில் ஆஜராகி விளக்கம்.

*தமிழ்நாடு அரசு அமைத்த உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு தடை கேட்டு அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு … பொய்ச் செய்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுப்பதில் தவறு என்ன என்று கேள்வி.

*அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம். பரமசிவனின் மனைவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் .. வருமானத்திற்கு அதிகமாக ரூ 38 லட்சம் மதிப்புள்ள சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.

*தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்படுவதாக வெளியான தகவலை மறுத்து கட்சி சார்பில் அறிக்கை .. ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை.

*மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிய வழக்கில கைது செய்யப்பட்ட வாசனின் யூ டியூப் சேனலை முடக்குமாறு காவல் துறை சார்பில் கோரிக்கை … வாசன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ்.

*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் ஏற்பட்டு உள்ள சிறு கட்டியால் கை,கால்கள் மரத்துப் போவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் .. உடல் நிலை குறித்து தொடர்ந்து மேலும் பல சோதனைகள்.

*நாகப்பட்டினத்தில் மாடு முட்டியதால் நிலை தடுமாறிய நபர் அரசு பேருந்தின் சக்கரத்தில் இறப்பு .. பரிதாப வீடீயோ காட்சி வலைதளத்தில் வரைலானது.

*செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு அதிகம் ஆனால் வாதம் ஏற்படக்கூடும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் .. உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டு விற்பனையை நிறுத்துவதற்கு அன்புமணி எதிர்ப்பு .. விற்பனையை தொடருமாறு வலியுறுத்தல்.

*நடிகர் திரிஷா குறித்து பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய வேண்டும் .. தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.

*விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசம் .. மர்ம நபர் ஒருவர் தீ வைத்து விட்டு ஓடியதாக மீனவர்கள் தெரிவித்த புகார் குறித்து போலீஸ் விசாரணை.

*இஸ்ரேல் –பாலத்தீனம் பிரச்சினையை தீ்ர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியது சீனா .. இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை பெய்ஜிங்குக்கு அழைத்து காசா போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை.

*காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் பிணைக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் இழுத்துச் செல்லும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் … மருத்துவமனைக்குள் சுரங்கப் பாதை அமைத்து பதுங்கி இருப்பதாகவும் தகவல்.

*உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்தது ஐ.சி.சி.ஐ.. ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்ட அணியில் விராட் கோலி, ராகுல், ஐடேஜா, பும்ரா, முகமது சமிக்கு ஆகிய 6 இந்திய வீரர்களுக்கு இடம்.

*ஐ.சி.சி. அறிவித்து உள்ள 12 போ் அணியில் ஆஸி. வீரர்கள் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்கா வீரர்கள் குயிண்டன் டி காக் , ஜெரால்ட் கோட்ஸிக்கும் வாய்ப்பு .. இலங்கையி்ன் தில்சன் மதுசங்க, நியூசிலாந்தின் டேரில் மிட் செல்லுக்கும் சர்வதேச அணியில் இடம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *