தலைப்புச் செயதிகள் … ( 23-11-2023)

*காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீர் டிசம்பர் இறுதி வரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் அறிவுறுத்தல்.

*மாநிலம் முழுவதும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” எனும் திட்டம் தொடக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு …. மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய உத்தரவு.

*கனமழை காரணமாக குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு… 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்… மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்.

*நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்… சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள்.

*தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்… 96 வயதாகும் பாத்திமா பீவி உடல் நலக்குறைவினால் மறைவு.

*டீப்ஃபேக் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆலோசனை… சமூக ஊடகங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் ஆலோசனையில் பங்கேற்பு… டீப்ஃபேக் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அஷ்வினி வைஷ்ணவ் தகவல்.

*உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்…. இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிப்பு.

*தமிழ்நாட்டில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று செயல்படவில்லை … தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

*கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 37 சென்டி மீட்டர் மழை பதிவு .. இந்த பருவ காலத்தில் அதிக பட்ச மழை பதிவு என்று தகவல்.

*கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு .. போக்குவரத்து பாதிப்பு.

*மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பல இடங்களில் கன மழை .. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது,

*மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல் முறையீடு செய்தவர்களுக்கு பத்து நாட்களில் குறுந்தகவல் அனுப்பப்படும் … அரசு வட்டாரங்கள் தகவல்.

*மதுரை‌, அழகர் கோவில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ராஜகோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேகம்…. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மதுரை கள்ளழகர் கோயில் குடமுழுக்கு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்.

*நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை போலீஸ் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் தரக் கோரிக்கை .. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நாளை ஆஜராக உத்தரவு.

*திரிஷா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு .. விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்.

*நடிகை குஷ்பு மன்னிப்புக் கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அறிவிப்பு … மன்சூர் அலிகான் விவகாரத்தில் சேரி மொழியில் தம்மால் பதில் அளிக்க முடியாது என்று குஷ்பு கூறிய கருத்தால் சர்ச்சை.

*சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது .. ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நான்காவது நபரிடமும் விசாரணை.

*சென்னை அடையாறில் ஓ.எம்.ஆர். சாலையில் கட்டப்பட்டு உள்ள யு டேர்ன் மேம்பாலத்தை திறந்த வைத்தார் முதலமைச்சா் ஸ்டாலின் .. மத்திய கைலாசம – டைடல் பூங்கா இடையே போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு.

*சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்கி இருந்தது பத்திரப் பதிவுத்துறை … வழக்கமாக கொடுக்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதில்150 டோக்கன்களை வழங்கி நடவடிக்கை.

*திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு மண்டல ஐ.ஐி.யாக இருந்த பிரேம்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து கோவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு … பாசி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி ரூ 2.5 கோடி லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்த தம்மை விடுவிக்கக் கோரி இருந்தார் பிரேம் குமார்.

*ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத் தளம் தொழில் நுட்பக் கோளாறால் தற்காலிமாக முடங்கியது .. டிக்கெட் முன் பதிவு செய்வது பாதிக்கப்பட்டது.

*பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் இறப்பு, மேலும் மூன்று போலீஸ்காரர்கள் காயம்.. இரண்டு குழுக்கள் இடையே குருத்வாராவை கைப்பற்றுவதில் நடந்த மோதலை போலீசர் தடுக்க முயன்ற போது வீபரீதம்.

*காஷ்மீரில் ரஜோவுரி மாவட்டத்தில் ராணுவத்தினர் நான்கு பேர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி தர நடவடிக்கை .. தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்.

*டெல்லியில் 350 ரூபாய்க்காக 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட பரிதாபம் … 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை.

*இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான டைகர் -3 என்ற திரைப்படம் கடந்த 10 நாட்களில் ரூ 400 கோடி வசூல் … தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

*ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி…முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது…பின்னர் ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *