தலைப்புச் செய்திகள் …(17-12-2023)

*நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, குமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை… இரவு தொடங்கி இன்று பகலிலும் கொட்டிய கன மழையால் நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி நகரங்கள் உப்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது..

*திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப் பட்டியில் காலை 8.30 மணி முதல் 6 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பதிவு… ராதாபுரத்தில் 19 செ.மீ, நாங்குநேரியில் 18 செ.மீ மழை பெய்து உள்ளதாக தகவல்.

*வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியல் டிசம்பர் 22 ஆம் தேி வரை தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் .. நான்கு தென் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுத்தது வானிலை மையம்.

*கன மழை தொடரும் என்று கணிக்கப்பட்டு உள்ளதால் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழு தென் மாவட்டங்களுக்கு விரைந்தது .. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. அறிவிப்பு .

*குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் பயணிகள் குளிக்கத் தடை … தென்மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் இது வரை இல்லாத அளவு தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம்.

*தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறக்கம் .. பயணிகள் பெருத்த ஏமாற்றம்.

*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … நிவாரணத் தொகை தொடர்பான சந்தேகங்களை போக்கிக் கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு.

*நான்கு மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நிவாரணத் தொகை பெறலாம் … காலையி்ல் கடைக்குச் செல்ல முடியாதவர்கள் மதியம் 2 மணி முதல் மலை ஐந்து மணி வரை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு.

*எண்ணூரில் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ 12.500 – ம் படகுகளுக்கு தலா ரூ பத்தாயிரமும் வழங்கப்படும் … எண்ணெய் பாதித்த கிராமங்களில் 2300 குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவராணம் வழங்க நடவடிக்கை.

*எண்ணூர் மற்றும் காட்டுக்குப்பத்தில் எண்ணெய் படலம் படர்ந்து உள்ள இடங்ளுக்கு படகில் சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆய்வு… சந்திரயானுக்கு விண்கலம் அனுப்பும் நாட்டில் எண்ணெய் படலத்தை அகற்றும் தொழில் நுட்பம் இல்லையா என்று கேள்வி.

*தமிழ்நாட்டில் 44 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அண்ணா பல்கழைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் … உரிய விளக்கம் தராவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு.

*தேனி அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து .. காரில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறப்பு.

*குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் வைரை நகை தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக உலகத்திலயே பெரிய அலுவலகம் கட்டிடம் பிரதமர் மோடியால் திறப்பு .. மொத்தம் 67 லட்சம் சதுர அடிக்கொண்ட 15 மாடிக்கட்டிடத்தில் 300 சதுர அடி முதல் 7500 சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை அமைத்துக் கொள்ள வாயப்பு.

*நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ள ஆறு பேரையும் காவலில் எடுத்து உள்ள டெல்லி தனிப்படை போலீஸ் தொடர்ந்து விசாரணை …செல்போன் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வு.

*நாடாளுமன்றத் தாக்குதல் மிகவும் தீவிரமானது என்பதால் அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி கருத்து … அனைவரும் சேர்ந்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமே தவிர சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது என்று இந்தி நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம்.

*கேரளாவி்ல் கண்டறியப்பட்டு உள்ள கோவிட் 19 ன் மாறுபட்ட ஜே என் 1 வைரஸ் ஆப்பதானது அல்ல என்ற சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம் …ஜே என் வைரஸ் புதியதல்ல, சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூரில் கண்டறியப்பட்டதாகவும பேட்டி.

*வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பு நிகழ்ச்சியில் தமிழ் நாட்டைசேர்ந்த 1,500 பேர் பங்கேற்பு .. வாரணாசி – கன்னியாகுமரி இடையிலான ரயிலும் பிரதமரால் தொடங்கி வைப்பு.

*மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் இறப்பு .. மூன்று பேர் காயங்களுடன் மீட்பு.

*மத்திய தணிக்கை வாரியம் தணிக்கை செய்த இந்திய படங்களை மட்டுமே வெளியிடப் போவதாக பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் அறிவி்ப்பு .. சர்ச்சைக்கு உரிய அரசியல் கருத்துகள், ஆபாச வசனங்கள் போன்றவற்றை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்ப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *