*சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்பு … சாலைகளின் இரண்டு புறங்களும் ஏராளமானவர்கள் நின்று கண்ணீருடன் புரட்சிக் கலைஞருக்கு பிரியாவிடை.
*தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பல ஆயிரம் குவிந்து இருந்தனர்.. வெகு தொலைவுக்கு நீண்டு கிடந்த வரிசையில் நின்று கண்ணீர்அஞ்சலி.
*சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மாலை ஆறு மணி அளவில் அடக்கம்.. உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், மற்றும் தோற்றம், மறைவு பற்றிய தகவல்கள் பொறிப்பு.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேமுதிக அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி .. அமைச்சர்கள் மற்றும் பல்வேறுக் கட்சித் தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பு.
*சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலை மரணமடைந்த விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில வைக்கப்பட்டு இருந்த பிறகு அதிகாலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.. இரண்டாவது நாளும் பல ஆயிரம் குவிந்ததால தீவுத்திடலை சுற்றிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
*கேப்டன் விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த மக்கள் குவிந்ததை கண்டு பலரும் வியப்ப்பு . . இவ்வளவு பேர் வருவார்கள் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று என்று கருத்து.
*தமிழ்நாட்டு செய்தி தொலைக் காட்சிகளில் நேற்று காலை தொடங்கி இன்று மாலை வரை கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சிகள் இடைவிடாது நேரடி ஒளிபரப்பு .. கோடிக்கணக்கான மக்கள் தொலைக் காட்சிகளில் பார்த்து உருக்கம்.
*தமிழ்நாட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்படத் துறையினர் என அனைத்து தரப்பினரும் கேட்பனுக்கு அஞ்சலி .. அனைத்து தரப்பினருமே விஜயகாந்திற்கு புகாழாரம்.
*சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள பிரமாண்ட பேருந்து நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை விரைவில் கிளாம்பாக்கத்தில் இயக்க நடவடிக்கை.
*தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு டாக்டர் ராமதாசு கடிதம் .. சமூக நீதியை பாதுகாப்பதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்தல்.
*அசாம் மாநிலத்தின் மிக முக்கிய தீவிரவாதக் குழுவான உல்பா உடனான ஒப்பந்தத்தில் மத்திய மற்றும் அசாம் மாநில அரசுகள் கையெழுத்து … டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் உல்பா அமைப்பின் தலைவர்கள் பங்கேற்பு.
*மும்பையில் கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த தீவிர வாதத் தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத் என்பவரை தங்களிடம் ஒப்டைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் .. பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சயீத் பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.
*நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் வரை தொடர அவைத் தலைவர்கள் முடிவு செய்திருப்தாக தகவல்.
*சம்யுகி கிஷான் மோர்ச்சா என்ற விவசாய கூட்டமைப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பிரச்சராம் செய்யப்போவதாக அறிவிப்பு .. சுமார் 500 விவசாய சங்கங்களின் கூட்டமைப்புதான் சம்யுகி கிஷான் மோர்ச்சா.
*அயோத்தியில் பிரமாண்ட விமான நிலையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையம் இரண்டையும் நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..விமான நிலையத்திற்கு ராமயாணத்தை எழுதிய வால்மீகியின் பெயரை சூட்டுவதாக இந்திய விமானத் துறை அறிவிப்பு.
*ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒரு மனதாக தேர்வு .. இதுவரை தலைவராக இருந்த லாலா சிங் விலகியதை அடுத்து தலைவர் பதவியை மீண்டும் ஏற்றார் நிதீஷ்குமார்.
*தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு .. ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சு நடந்ததாக தகவல்.
*ஜனவரி 15- ஆம் தேதி மாலை நடைபெற உள்ள மகர ஜோதிக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை திறப்பு … மண்டலப் பூஜையின் போது கூடியது போன்று பெரும் கூட்டம் வரும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை அரசும் தேவசம் போர்டும் ஏற்பாடு.
*கர்நாடகத்தில் சிக்கப்பள்ளப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றபோது ஆசிரியர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கொஞ்சி குலாவும் படங்கள் வலை தளங்களில் வைரலானது .. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை.
*பிரான்ஸ் நாட்டின் எல் ஓரல் அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மெயிர் உலகத்தில் அதிக சொத்து உள்ள பெண்மணி என்று ப்ளூம்பெர்க் அமைப்பு அறிவிப்பு… சொத்து மதிப்புக் கூடியதால் உலகப் பணக்காராகள் பட்டியலில் பிரான்காய்ஸுக்கு 12-வது இடம்.‘
*இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ 500 வசூலித்து உள்ளதாக படக்குழு தகவல் .. பிரபாஸ், பிருதிவிராஜ் உள்ளிட்டோர் நடித்து உள்ள சலாம் என்ற படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த வாரம் வெளியானது.