தலைப்புச் செய்திகள் (10-01-2024)

*தமிழ் நாட்டில் இரண்டாவது நாளாக நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் …பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டத்தைத தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விளக்கம்.

*போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு பதில்… ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது… அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

*முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அனுப்பிய பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவு ….அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்துமாறும் சென்னை உயரநீதிமன்றம் தீர்ப்பு.

*தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்….தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தகவல்.

*தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.ராமன் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார்… அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் பி.எஸ்.ராமன் தலைமை வழக்கறிஞராக நியமனம்.

*அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு…சென்னை, ஆழ்வார்பேட்டையில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

*பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிப்பு… 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

*ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் செய்நன்றி இருப்பதால் தான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுகிறேன் எனவும் ஓ.பி.எஸ் பேச்சு…எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்.

*ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை… ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று சபாநாயகர் அறிவிப்பு….

*ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்… ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆகியோர் நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளதாக அறிக்கை.

*இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி… முகேஷ் அம்பானி புகழாரம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *