*சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படவேண்டும் என்று அரசு உத்தரவு… அடுத்த மூன்று மாதங்களுக்கு கோயம்பேட்டில் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் கிளாம்பாக்கம் புறப்பாடு இப்போது முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி.
*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று மம்தா பானர்ஜி அறிவிப்பு …மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தருவதாக மம்தா சொன்னதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் கூட்டணியில் விரிசல்.
*காங்கிரசுடன் தொகுதி பங்கீடு இல்லை என்றாலும் இந்தியா அளவில் இந்தியா கூட்டணியில்தான் திரினாமுல் உள்ளதாக மம்தா விளக்கம் … ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கு வங்கம் வழியாக வருவது பற்றி தங்களுக்கு தகவல் கூட தரவில்லை என்றும் புகார்.
*மேற்கு வங்கத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி … பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்காமல் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டு 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அந்த மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி.
*நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த முதலமைச்சர் அசாம் மாநில பாஜக முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ்தான் … இந்திய நியாய பயணத்தின்7- வது நாளில் முதன் முதலாக பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கடுமையான பாஜக அரசு மீது கடுமையான புகார்.
*அசாம் மாநிலத்தின் கௌகாத்தி நகரத்தில் நேற்று தடையை மீறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு … இன்னும் முடிந்த அளவு தன் மீது வழக்குகள் பதியட்டும், அதற்காக அஞ்சப் போவதில்லை என்று ராகுல் காந்தி பதில்.
*எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தூணாக உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடா்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி … மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது என்று கருத்து.
*மதுரை அருகே கீழக்கரை என்ற கிராமத்தில தமிழ்நாடு அரசு கட்டியுள்ள பிராமண்டமான ஏறு தழுவதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … புதிய அரங்கத்தில் நடை பெற்ற முதல் ஜல்லிக் கட்டுப் போட்டியில் 400 காளைகளும் 300 வீரர்களும் பங்கேற்பு.
*ஏறு தழுவுதல் அரங்கத்தை கட்டியவர் என்று வரலாற்றில் தமது பெயர் இடம் பெற்றுவிட்டதாக மு..க.ஸ்டாலின் பேச்சு .. ஆனால் மத்திய அரசு மதுரையில் அறிவித்த பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் புகார்.
*கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் முதலிடம்… முதலிடம் பிடிக்கும் காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு `தார் SUV’ உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
*பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.வின் குடும்பம் கொத்தடிமை முறையை நடைமுறைப்படுத்தி உள்ள போதும் அவருடைய மகனையும், மருமகளையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி … குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு.
*தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து…பாலத்தின் மீது லாரி, 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
*சட்டப் பேரவை நிகழச்சிகளை முழுமையாக நேரலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் … சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் கருத்து.
*விருது நகர் அருகே ஆர்.ஆர்.நகர் என்ற இடத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேர் இறப்பு … மூன்று அறைகள் தரைமட்டம்.
*தைப்பூசத்துக்காக சனிக்கிழமை, குடியரசுத் தினத்துக்காக வெள்ளிக்கிழமை, அதன் பிறகு சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை … ஏ.எடி.எம். மையங்களை பயன்படுத்துவோர் முன் கூட்டியே பணம் எடுத்து வைத்துக் கொள்ள ஆயத்தம்.
*கொல்கத்தா அருகே நடந்த கார் விபத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலையில் லேசான காயம் .. மற்றொரு வாகனத்துடன் மோதமல் இருக்க பிரேக் பிடித்த போது மம்தா பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது.
*ரஷ்யா நாட்டின் ராணுவ போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் பெல்கிரேட் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி விபத்து .. . விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட உக்ரைன் போர்க்கைதிகள் 65 பேர் உட்பட 74 பேர் உயிரிழந்து விட்ட பரிதாபம்.
*போர்கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்திவிட்டதாக ரஷ்யா தரப்பில் குற்றச் சாட்டு … விமானம் விழுந்ததும் வலது இறக்கை தீப்பிடித்து எரியும் காட்சி வலைதளங்களில் வைரல்.
*ஆஸ்கர் விருதுக்கான ஆவணப் படப் பிரிவுக்கான பட்டியலில் இ்ந்தியாவில் பிறந்து கனடா நாட்டில் வசிக்கும் நிஷா இயக்கிய டு கில் ஏ டைகர் என்ற ஆவணப்படமும் தேர்வு … அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் மார்ச் 10 -ஆம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிஷா இயக்கிய படத்துக்கு விருது கிடைக்குமா என்பது தெரியவரும்.
*ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்… ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, ஆஸி.யின் மேத்யூ ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம் .
*லால் சி்ங் சத்தா படம் தோலிவி அடைந்ததால் ஒரு ஆண்டாக ஓய்வில் இருந்த நடிகர் அமீர்கான், சித்தாரே ஜமீன் பார் என்ற படத்தில் நடிக்க ஆயத்தம் … தயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்த அமீர்கான் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கியதும் நினைவு கூறத்தக்கது.