*-நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில தனி நபர்களுக்கான வருமான வரி விதிப்பு உட்பட எந்த வரி விதிப்பு முறைகளிலும் மாற்றம் இல்லை…. பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன், கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு என்று பல்வேறு துறை புள்ளி விவரங்களை வெளியிட்டு நிர்மலா பெருமிதம்.
*இந்திய மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது, 2027 -ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதராமன் பட்டியல்.. முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்; ஆன்மீக சுற்றுலா ஊக்குவிக்கப்படும் என்றும் உறுதி.
*நாட்டின் 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்; 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும் என்பதும் மத்திய பட்ஜெட்டில் முககிய அம்சங்கள்.. 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்; மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிப்பு.
*தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பம் … நிதி அமைச்சர் தங்கம்.தென்னரசு 19 -ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டி.
* கடந்த 2015-2017 வரையிலான காலத்தில் சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ₹50 கோடி லஞ்சம் கொடுத்ததாக கட்டுமான நிறுவன இயக்குனர்கள் சுனில் கேட்பாலியா, மணீஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு …சென்னை பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்காக லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் 5 இடங்கிளி்ல் சோதனை.
*மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்யவும் ராமதாஸ்க்கு அதிகாரம் … சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானம்.
*ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது, பழங்குடியினத் தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை… விரத்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் பாஜக ஈடுபட்டுள்ளதை சோரன் கைது வெளிக்காட்டுகிறது என்று மு.க.ஸ்டாலின் கணடனம்.
*டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் பிப்ரவரி மாதத்தில் 2.5 டி.எம்.சி. தணணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு … கர்நாடகம் தாக்கல் செய்த மேகதாது அணைத்திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பியது ஆணையம்.
*தூத்துக்குடி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தளவாட வசதிகளை ஏற்படுத்திட ஸ்பெயின் நாட்டின் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ 2500 கோடி முதலீடு செய்ய திட்டம் ,,, ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.
*தமிழ்நாட்டில் மதுபானங்களில் விலை ரூ 10 முதல் 80 வரை அதிகரிப்பு … பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மது விலை 180 எம்.எல்.க்கு ரூ 10-ம்,360 எம்.எல்.க்கு ரூ 40 வரையும் கூடியது.
*நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் … டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு..
* சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…. கல்விநிலைய விண்ணப்பஙகளில் வேண்டுனால் சாதி மற்றும் மதம் தொடர்பான ,இடங்களை பூர்த்தி செய்யாமல் விட்டுவிடலாம் என்றும் நீதிபதி கருத்து.
*மதுரையில் நாட்டுபுற மேடை பாடகி கவிதாவை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு மாரடைப்பு என்று நாடகமாடிய இரண்டாவது கணவர் நாகராஜன் கைது … இரண்டு பேரின் நான்கு குழந்தைகளும் பெற்றோரை இழந்து தவிப்பு.
*ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை ரூ.1937 ஆக அதிகரிப்பு… வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
*சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை… பி்ப்ரவரி ஒன்றாம் தேதியான இன்று முதல் ஆரம்பம்.
*சென்னையில் இருந்து ஸ்பை ஜெட் விமானம் மதியம் 12.40 மணிக்கு அயோத்திக்கு புறப்படும், அங்கு மலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு சென்னைக்கு வரும்… கட்டணம் ரூ 6 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முதல் நாளில் ரூ 52 ஆயிரமாக கட்டணம் அதிகரிப்பு.
*ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் கைதை அடுத்து அந்த கட்சியின் சம்பா சேரான் தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்தும் ஆளுநர் தாமதப்படுத்துவதால் சர்ச்சை… பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தும் இழுத்தடிப்பதாக புகார்.
*அமலாகத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் … தலைமை நீதிபதி அமர்வு முன் நாளை விசாரணை.
*மலேசியா நாட்டின் 17- வது மனனராக பொறுப்பேற்றுக் கொணட இப்ராகிம் இஸ்கந்தாவுக்கு சொந்தமாக 300 கார்கள், தனி விமானங்களும் உள்ளன… பல் வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கும் புதிய மன்னரின சொத்து மதிப்பு 47 ஆயிரம் கோடி ரூபாய் என்று தகவல்.
*இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நாளை தொடக்கம் … ஐதராபத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி விசாகப்பட்டினத்தில் வெற்றியை சுவைக்க ஆர்வம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447