*சென்னையில் மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை….பெங்களூரு கஃபேவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள சில வீடுகளில் விசாரணை.
*பெங்களூரு சிறையில் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க முயன்றதாக புகார் .. தமிழ்நாடு, கர்நாடகம் உட்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை.
*முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என சட்டப்பேரவை அலுவலகம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்….சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி பதவி இழந்தார்.
*இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் … கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை.
*கடந்த வாரம் மதுரை வந்திருந்த பிரதமர் மோடி உடன், அவர் தங்கியிருந்த விடுதியில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் சந்திப்பு… . அமைச்சர் ஒருவர் பிரதமரை சந்தித்துப் பேசியது பற்றி அரசு தரப்பில் செய்தி எதுவும் அதிகாரப் பூர்வமாக வெளியிடாததால் சர்ச்சை வலுப்பெற்றது.
*பிரதமர் மோடிக்கும் தனக்கும் தனிப்பட்ட உறவு உள்ளது போன்று செய்தி பரப்பப்படுவதாக பிடிஆர் தியாகராஜன் விளக்கம் … முதலமைச்சர் வழங்கிய அரசாங்கப் பணிக்காகவே பிரதமரை சந்திதுப் பேசியதாகவும் தனிப்பட்ட விருப்பதிற்காக அல்ல என்றும் கருத்து.
*கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலி்ன் சென்னையில் திமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனை … காங்கிரஸ்,மதிமுக,விசிகவுக்கான தொகுதிப் பங்கீடு பற்றி கருத்து பரிமாற்றம்.
*நாடளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புதிய தமிழகத்துடன் கூட்டணி உறுதியானது … தொகுதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
*மதுரை அருகே .தோப்பூரில் 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கியது எல்&டி நிறுவனம். … 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் மருத்துவமனையின் பணிகளை 33 மாதங்களில் முடிக்க திட்டம்.
*மக்களவைத் தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கேடேசன் புகார் .. கடந்த 2019 ல் அடிக்கல் நாட்டி விட்டு இப்போது கட்டுமானப் பணியை தொடங்குவது நாடகம் என்றும் விமர்சனம்.
*தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்தார் கனிமொழி … தோல்வி பயம் அதிகரிக்க, அதிகரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் விமர்சனங்களை பிரதமர் மோடி முன் வைப்பதாக விமர்சனம்.
*அய்யா வைகுண்டனார் உருவ வழிபாடு. மொழி. ஆண்- பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் … அய்யா வைகுண்டனார் சனாதானத்தை ஆதரித்தவர் என்று ஆளுநர் ரவி கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சாமித் தோப்பு வைகுண்டர் தலைமை பதி பிரஜாபதி அடிகளார் பதிலடி.
*புதுச்சேரியில் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்குத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் நியமனம் … குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததால் விரைவில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
*கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை … மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
*மணப்பாறை அருகே உள்ள சித்தாந்தம் என்ற கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், பட்டா பெயர் மாற்றம் செய்ய கூலித் தொழிலாளியிடம் ₹1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது … லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை.
*புதுவையில் நான்கு நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கழிவு நீர் கால்வாயில் வீசிய கொடூரம் …. காணாமல் போன சிறுமியின் உடல் வீட்டின் அருகேயே உள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி
*தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டம் … பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிக்கை.
*தங்கத்தின் விலை சவரன் ரூ 48 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை தொட்டது…. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை.
*ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு தற்காலிக தடை … ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் மனுவை ஏற்று சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கர்நாடகா ஹைகோர்ட் தற்காலிக தடை விதித்து உத்தரவு.
*கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீது 2018- ல் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்…. கூட்டுச்சதி என்ற புகாரை மட்டுமே வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அமலாக்கத்துறையின் மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ளதால், அதனை மேற்கோள்காட்டி தடைவிதிப்பு.
*கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா ராஜினாமா … பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடிவு. நீதிபதியின் செயலுக்கு வலை தளங்களிர்ல கண்டனம்.
*கர்நாடகாத்தி்ல் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் “குண்டு வெடிக்கும்” என கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்…. கடந்த வாரம் பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில் மீண்டும் வந்துள்ள மிரட்டல் குறித்து விசாரணை.
*தெலங்கானா: ஹனுமகோடா மாவட்டம் காசிபேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து…. தீ விபத்தின்போது ரயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை.
*டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரி பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு விதிக்கப் பட்டு இருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்தது பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் … மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சாய்பாபாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
*கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக மத்திய அரசு தகவல் … செயலிகளுக்கான நிறுவனங்கள் கூகுளுக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதி.
*இஸ்ரேலின் வடக்கு முனை மீது ஹெஸ்பெல்லா அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இறப்பு … மேலும் ஏழு பேர் காயம்.
*வட நாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது மதப் புயல் அல்ல. மடப்புயல் என்று நடிகர் சத்யராஜ் விமர்சனம் … நம் பிள்ளைள் மருத்துவத்தை சமஸ்கிருதத்தில் படிக்கச் செய்யும் திட்டம் தோல்வி அடைந்ததால் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளதாகவும் கருத்து.
*இந்தியா எனது குடும்பம் என்ற மோடி பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதில் … மணிப்பூர் மாநில மக்களும் மோடியின் குடும்பத்தினரா என்று கேள்வி.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447