*நாடாளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு …
1,தூத்துக்குடி- கனிமொழி,
2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,
6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,
8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,
9,திருவண்ணாமலை- அண்ணாதுரை
10,தர்மபுரி- ஆ.மணி
11,ஆரணி-தரணிவேந்தன்
12,வேலூர்- கதிர் ஆனந்த்,
13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
14,சேலம்-செல்வகணபதி
15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.
16,பெரம்பலூர் – அருண் நேரு
17,நீலகிரி – ஆ.ராசா,
18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
19,தஞ்சாவூர் – முரசொலி
20,ஈரோடு-பிரகாஷ்
21,தேனி- தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுக வேட்பாளர்கள்.
*திமுக வில் இப்போது எம்.பி. க்களாக உள்ள ஆறு பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுப்பு..
செந்தில் குமார் -தர்மபுரி,
எஸ்.ஆர்.பார்த்திபன்-சேலம்,
சண்முகசுந்தரம்- பொள்ளாச்சி,
கவுதம சிகாமணி-கள்ளக்குறிச்சி,
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்-தஞ்சாவூர்,
தனுஷ் எம். குமார்-தென்காசி ஆகிய சிட்டிங் எம்.பிக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
*வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை… எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்…. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்-தமிழ்நாட்டோட நலன் முக்கியம் என்று பணியாற்ற வலியுறுத்தல்.
*திமுக தேர்தல் வாக்குறுதிகள்:
உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு ரத்து செய்யப்படும். மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்
100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்
பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி.
* திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக உள்ளது… பாஜக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை.
*இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை. மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு மத்தியில் அமைய வேண்டும்…. இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு.
*அதிமுக 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது …
1…வடசென்னை – ராயபுரம் மனோகரன் 2…தென் சென்னை – ஜெயவர்தன்
3…காஞ்சிபுரம் – ராஜசேகர்
4…அரக்கோணம் – விஜயன்
5…ஆரணி – கஜேந்திரன்
6…கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
7….விழுப்புரம் – பாக்கியராஜ்
8…சேலம் – விக்னேஷ்
9…நாமக்கல் – தமிழ்மணி
10…ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11…கரூர் – தங்கவேல்
12…சிதம்பரம் – சந்திரஹாசன்
13…மதுரை – சரவணன்
14…தேனி – நாராயணசாமி
15…நாகை – சுர்ஜித் சங்கர்
16…இராமநாதபுரம் – ஜெயபெருமாள்
*மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையழுத்தானது…..அதிமுக கூட்டணியல் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டி.
*அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள், சவால்களை கடந்து வெற்றி பெரும்-சென்னையில் அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
*அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு…புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு… எஸ் டி பி ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு.
*தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்….களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளதாக அண்ணாமலை விளக்கம்.
* பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்.….வேலூர் தொகுதியை புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கியது பாஜக… கட்சித்தலைவர் ஏசி சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியி முடிவு… பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி.
*பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி.. 4 தொகுதிகள் கேட்ட நிலையில் பாஜக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வருவதால் தமாக அதிருப்தி .
*பாஜக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் ஓபிஎஸ் அணியுடனும் இழுபறி ….தங்கள் தரப்பு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து நாளை முடிவை அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
*ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.…..
*ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
*அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்… திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடமிருந்து 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்ப முயன்ற வழக்கில் அன்கித் திவாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
*அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை ED தடுக்கக் கூடாது என்றும் கருத்து.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447