நவம்பர்-30,
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் என்ற புயல் கரையைக் கடக்க உள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இரண்டாவது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது.
மணிக்கு 7கிலோ மீட்டர் வேக்த்தில் நகர்ந்து வரும் புயல், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் நிலை எற்பட்டு உள்ளது
மஸ்கட், குவைத், மும்பை உட்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் காலையில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே சென்னை விமானநிலையம் மூடப்பட்டுவிட்டதாக வெளியான தகவல் தவறானது என்று விமான நிலைய மேலாளர் தெரிவித்து உள்ளனர். பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட தொடர்புடைய விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாார் .மேலும் கன மழை பாதிப்புக் குறித்து அவர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இதுவரை பெரிதாக எங்கும் பாதிப்பு இல்லை- முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் பலத்து காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
*
2024-11-30