டிசம்பர்-22.
நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கூடுதல் பாதுகாப்பு, பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும் அனுமதி கொடுத்து இருக்கிறார்.
இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23- ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிஜிபி தமது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
நெல்லையில் கடந்த வாரம் நீதிமன்றம் எதிரே மாயாண்டி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் , சம்பவத்தின் போது திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீ்ஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு டிஜிபி ஏற்பாடு செய்து வருகிறார்.
*