டிசம்பர் -25,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசில் இந்திப் படத்த்தில் நடிக்க இருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பகத் பாசில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். வேட்டையன், மாமன்னன், விக்ரம் போன்ற முக்கியமான வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அவர் பிடித்தமான நடிகராக உள்ளார். தெலுங்குப் படங்களான புஷ்பா-1 மற்றும் புஷ்பா-2 ஆகிய படங்களில் நடித்து அந்த மொழி ரசிகர்களின் மனத்தல் இடம் பிடித்து இருக்கிறார்.
இப்போது பகத் பாசில் இந்தியில் இம்தியாஸ்அலி இயக்கத்தில் திரிப்தி டிம்ரிக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் உறுதியாகி உள்ளது. இதனால் அவர் இந்திய முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்து பல கோடி ரசிகர்களின் அபிமானத்தை பெறுகிறவராக மாற இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மற்றொரு முன்னணி நடிகரான துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ். தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.
*