ஜனவரி-02,
2025 -ஆ ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ஜாக்பாட்’ ஆண்டு என சொல்லலாம். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நான்கு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் இந்த ஆண்டில். அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
முதலாவதாக ரஜினியின் ‘கூலி’ படத்தை பார்க்கலாம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வாண்டட் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.அனிருத் இசை.
நாகார்ஜுனா ,சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என ‘டாப்’ நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர்.பான் இந்தியா படமாக உருவாகும் கூலி, உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ஷுட்டிங் இன்னும் முடியவில்லை.அந்த படத்தின் படப்பிடிப்புக்காக சூப்பர்ஸ்டார் இன்று ஹாங்காங் பயணமாகிறார்.
நாயகன் படத்தையடுத்து, 32 ஆண்டுகளுக்கு பிறகு கமலும், மணிரத்னமும் சேர்ந்துள்ள படம் ‘தக் லைஃப். சிம்பு, திரிஷா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
கமலில் ராஜ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கின்றன. பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதி தெரியவில்லை.
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. பூஜா ஹெக்டே, மமிதா பைஜா என இரண்டு ஹீரோயின்கள்.
பாலிவுட் ஸ்டார் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை.
அரசியலுக்கு சென்றுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இளையதளபதியின் படம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள விடாமுயற்சி, பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது.படத்தயாரிப்பு நிறுவனமான லைகா , திடீரென தள்ளி வைத்து விட்டது.
அவர் நடிக்கும் இன்னொரு படமான குட் பேட் அக்லியை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்டு செய்கிறார்.இதில் அஜித்துக்கு மூன்று வேடங்கள். பிரபு, திரிஷா, உள்ளிட்டோரும் உண்டு. விடாமுயற்சியை தொடர்ந்து , இந்தப்படம் வெளிவரும்.
இந்த படத்தை முடித்து விட்டு துபாய் கார் ரேசுக்கு அஜித் சென்று விடுவார்.
ஒரு வருடத்துக்கு அவர் படத்தில், நடிக்க மாட்டார்.
*