ஜனவரி-02,
சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம். உறுதி செய்து உள்ளது.
எஸ்.வி. சேகர் முன்பு பாஜகவில் இருந்த போது தெரிவித்த கருத்த ஒன்றுக்காக அவரை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் அவதூறாக பேசினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து இரண்டு மாதங்குளுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், அவரது சிறைத் தண்டனையை இன்று உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சேகருக்கு அனுமதி அளித்த நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சிறைத் தண்டனையை எதிர்த்து சேகர் தாக்கல் செய்ய இருக்கும் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்போது தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கலாம். அல்லது தண்டனை செல்லும் என்று தீர்ப்பளித்தால் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு மாதம் சிறையில் இருப்பது தவிர்க்க முடியததாகிவிடும்.
முன்பு தீவிர பாஜக ஆதரவாக செயல்பட்ட எஸ்.வி. சேகர், கடந்த சில மாதங்களாக அந்த கட்சியில் இருந்து விலகியதோடு அந்த கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் குறிபிடதக்கது.
**