சம்பளத்தை குறைத்த ஷங்கர், ராம் சரண் !

ஜனவரி-03.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, இதனை வெளியிட்டார்.

‘கேம் சேஞ்சர்’ நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது. நட்சத்திரங்களில் ‘கால்ஷீட்’ உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தேதிகள் அடிக்கடி மாற்றப்பட்டன.

இதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம்.அவருக்கு உதவும் வகையில் ராம் சரணும், ஷங்கரும் சம்பளத்தை குறைத்தே வாங்கியுள்ளனர்.

வழக்கமாக வாங்கும் ஊதியத்தில் பெரும் தொகையை குறைத்துக்கொண்டு ரூ. 65 கோடி மட்டுமே ராம் சரண் பெற்றுள்ளார்.

ஷங்கர், இந்த படத்துக்கு 35 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார்.

படம் நன்றாக ஓடி, கல்லா நிரம்பி வழிந்தால் , தயாரிப்பாளர் ‘கவனிப்பார்’ என்ற நம்பிக்கைதான், காரணம் என்கிறார்கள், சினிமா வட்டாரத்தினர்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *