ஜனவரி -06.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே தமிழக அரசின் சுகாதாரத் துறை “தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த HMPV பாதிப்புகள் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. HMPV வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை ” என்று தெரிவித்து உள்ளது.
பெங்களூரில் HMPV வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து கர்நாடகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்த மாநில சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே இந்தியாவில் HMPV நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து இருக்கிறது.
*