ஜனவரி-06.
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தாததால் இந்த உத்தரவை பிறப்பிக்க நேரிட்டு உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
முந்தையை அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வாங்கினார் என்று அவர் மீது திமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
*