ஜளவரி-18,
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் பிடிப்பட்ட வாலிபர் குற்றவாளி அல்ல என்று மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். ெநடிய விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இந்த வழக்கில் துப்புத் துலக்குவதற்காக அமைக்கப்பட்டு உள்ள 20 தனிப்படைகளும் தொடர்ந்து தேடுதல் வேட்ைடயில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை கத்தியால் குத்தப்பட்ட சயீப் அலிகான் ஆபத்தான கட்டத்தை தாண்டி உள்ளதால் விரைவில சாதாரன வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.
இந்த தாக்குதல் பணம் பறிக்கும் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ள போலீசார் கொள்ளையனைத் தவிர வேறு கும்பல்களுக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர்.