சீமானுக்கு சிக்கல் மேல் சிக்கல். எழுவாரா? வீழ்வாரா?

ஜனவரி-22.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, பேசி, வன்முறையை தூண்டியதாக சீமான் மீது காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் ஆஜராவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் சீமான் அந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் பிப்ரவரி 19- ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அவதூறு வழக்குகள் ஒரு புறம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரனைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சீமான் கூறி வருவது பொய், அப்படி ஒரு புகைப்படத்தை அவருக்கு எடிட் செய்து கொடுத்ததே தான் தான் என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த வாரும் தெரிவித்து உள்ளார்.


சங்ககிரி ராஜ்குமாரின் பேட்டிக்கு சீமான் இது வரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் வன்னிக் காட்டில் பிராபகரனை சந்தித்தது உண்மையா என்பதில் ஏற்பட்டுள்ள சந்தேகம் சீமான் மீதான நம்பகத்தன்மையை அரசியல் களத்தில் கேள்விக்குறியாக்கி உள்ளது.
நடிகர் விஜய் கட்சித் துவங்கியதால் நாம் தமிழர் கட்சியில் இருந்து இளைஞர்கள் பலர் அந்தக் கட்சிக்கு செல்லல் தொடங்கி விட்டனர், இதனால் சீமான் கட்சிக்கு இனி வளர்ச்சி என்பது இல்லை என்று கருத்து நிலவி வருகிறது.
இன்னொருபுரம் சங்கிகள் என்றால் நண்பர்கள் என்று சீமான் சொன்ன விளக்கம் அவருக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்திவிட்டதாக அவரை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இப்போது அவதூறு வழக்குகள் கழுத்தை நெருக்க ஆரம்பித்து உள்ளன. இவற்றில் இருந்து சீமான் மீள்வாரா அல்லது வீழ்வாரா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு உள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *