பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்க மோடி ஆதரவு?

ஜனவரி -23,

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவி, இரண்டாவது முறையாக அண்ணாமலைக்கு கிடைக்குமா? என்பதுதான் இப்போது சூடான கேள்வி.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உள்கட்சி தேர்தல்கள் நடைபெற்று மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர்
அடுத்து கட்சிக்காக மாநிலத் தலைவரை நியமிக்க வேண்டும்.
இப்போது தலைவராக உள்ள அண்ணாமலை ஐ.பி.எஸ். வேலையை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். வயது 40 தான் ஆகிறது. மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளார் சமூகத்தை சேர்ந்தவர். இவர் தலைவராக நியமிக்கப்பட்டப் பிறகு அந்த மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. கட்சியை பரவலாக அறியச் செய்து இருக்கிறார் என்பது இவரது பலங்களாக உள்ளன.
ஒரு தேர்தலில் கூட வெற்றிப் பெற்றது கிடையாது. அதிமுகவை வேண்டுமென்றே சீண்டி அந்தக் கட்சியை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற்றியது போன்றவை அண்ணாமலைக்கு எதிராக உள்ளன.

இதனால் அண்ணாமலை இரண்டாவது முறை பாஜக தலைவராக நியமிக்கப்படுவாரா? இலலையா? என்ற கேள்விக்கு பலரும் விடைத் தேடி வருகின்றனர்.


தலைவர் பதவிக்கான களத்தில் உள்ள இன்னொருவர் வானதி சீனிவாசன். இவர் கட்சியின் அகில இந்திய மகளிரணி பொறுப்பில் இருக்கிறார். அண்ணாமலைப் போன்று இல்லாமல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர். நல்ல பேச்சாளர் போன்றவை வானதிக்கு பலம் சேர்க்கக் கூடிய அம்சங்கள்.

தலைவர் பதவிக்கான மூன்றாவது முகம் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். அங்கிருந்து பாஜகவுக்கு வந்த பிறகு நெல்லை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ளார் இவரை தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்துகிறது.

இவர்களை அல்லாமல் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜன். மற்றும் எச்.ராஜா போன்றவர்களும் பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு இருப்பதாகவே தெரிகிறது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *