சென்னையில் பிரபல ஐடி நிறுனத்தில் வேலை பார்க்கும் அறிவுக்குமார், சொந்த ஊரான மதுரைக்கு ஞாயிற்றுக் கிழமையான மறுநாள் அவசரமாகச் செல்ல வேண்டும். அதற்காக எழும்பூரில் இருந்து காலை ஆறு மணிக்குப் புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்ய முடிவு செய்தார்.
தட்கல் டிக்கெட் என்றால் ஒரு நாள் முன் கூட்டியே பதிவு செய்யவேண்டும். ஞாயிற்றுக் கிழமை பயணத்திற்கு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு தட்கலுக்கான வெப்தளம் திறக்கப்படுவதற்காக அறிவுக்குமார் காத்திருந்தார்.முன்னதாக லேப்டாப்பை திறந்து ஐஆர்டிசி பக்கத்தை திறந்து டிக்கெட் பெறவதற்கான தகவல்களை பதிவு செய்து வைத்திருந்தார்.
காலை 10 மணிக்கு ஐஆர்டிசி வெப்சைட் திறந்தது. சாப்ட்வேர் துறையில் வல்லவரான அறிவுக்குமார் லேப்டாப்பில் வைத்திருந்த தகவல்களை உள்ளே செலுத்தினார். ஆனால் வெப்சைட் திறந்த 10 நொடிகளில் தேஜஸ் ரயிலில் மதுரைக்குச் செல்வதற்காக தட்கல் பிரிவில் ஒதுக்கப்பட்டிருந்த அனைத்து டிக்கெட்டுகளும் பதிவாகிவிட்டன.
காலையில் எழுந்து தட்கலில் டிக்கெட் பதிவு செய்வதற்கு காத்திருந்த அறிவுக்குமாருக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது.
எதனால் அறிவுக்குமாருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை?
தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாக முன் பதிவு செய்து அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் சந்திப்பதற்கு என்றே சட்டவிரோத கூட்டம் பீகார், மத்தியபிரதேச மாநிலங்களை மையமாக கொண்டுச் செயல்படுகிறது. இவர்கள் தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட சாப்ட்வேர்களை வாங்கி அதனை ஐஆர்டிசி வெப்சைட்டுன் இணைத்து உள்ளனர்.
நாம் தட்கல் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும் போது பணம் செலுத்துவதற்கு OTP எண் நாம் கொடுக்கும் செல்போன் எண்ணிக்கு வரும். அதை செலுத்தினால் தான் ஐஆர்சிடிசி வெப்சைட் நமது கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு டிக்கெட்டை நமக்கு ஒதுக்கும்.
ஆனால் அவர்கள் (சட்டவிேவிரோத) மேற்கொண்ட சாப்ட்வேர் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது OTP வராதது போன்று அதை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் அவர்களால் உடனடியாக டிக்கெட்டுகளை பதிவு செய்துவிட முடிகிறது.
இந்தக் கும்பல் தமிழ் நாட்டில் உள்ள டிராவல் ஏஜென்டுகள் பலருடன் ஏற்கனவே நல்ல தொடர்பை வைத்திருக்கிறது. அவர்களுக்கு இந்த திருட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து தட்கல் டிக்கெட்டுகளை அப்படியே பதிவு செய்ய வைக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ரூ ஆயிரம் வரை கூடுதல் விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்கிறார்கள்.
இந்திய ரயில்வேயின் புலனாய்வுப் பிரிவு இந்த மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டில் 400 வழக்குகளை பதிவு செய்து ரூ 1.2 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து உள்ளது. மேலும் மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர்களை முடக்கியும் இருக்கிறது. இருந்தாலும் மோசடியை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.
மோசடிகள் தடுக்கப்படும் வரை , அறிவுக்குமார் போன்ற சாதாரண பயணிகளுக்கு தட்கலில் டிக்கெட் கிடைக்காது.
*