ஜனவரி-29.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இளம்பெண்களின் வீடு வரை அவர்களின் காரை திமுக கொடி கட்டிய காரில் இருந்தவர்கள் துரத்திச் சென்றதாக காவல் துறை தெரிவித்து உள்ளது.
“ கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு அருகே ஜனவரி 25- ஆம் தேதி இரவு இரண்டு கார்களில் இருந்தவர்கள் தங்கள் காரை இடைமறித்தனர். பின்னர் எங்கள் வீடு வரை துரத்தி வந்து அவர்களின் வாகனத்தை எங்கள் கார் இடித்ததாகக் கூறி வாக்குவாதம் செய்தனர் ஆனால் அந்த இளைஞர்களின் காரை நாங்கள் இடிக்கவில்லை” என்று அந்தப் பெண் தமது புகாரில் தெரிவித்து உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டடு உள்ளது.
பெண்கள் சென்ற காரை விரட்டியதாகக் கூறப்படும் கார்களை தேடி வருகிறோம். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
திமுக கொடி கட்டிய காரில் இருந்தவர்கள் மற்றொரு காரில் இருந்த இளம் பெண்களை இரவு நேரத்தில் மிரட்டி வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்த காவல் துறை இந்த விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறது.
காரில் இருந்த இளைஞர்கள் யார் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது. அவர்கள் பிடிபடும் போது உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
*