ஈமு கோழி நிறுவன இயக்குநருக்கு எதற்காக 10ஆண்டு சிறை?

ஜனவரி-29,

ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுசி ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10ஆண்டு சிறையும் ரூ.19.03 கோடி அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஈரோட்டை அடுத்த பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி பண்ணை நிறுவனம் கடந்த 2010ல்– கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியது.

விவசாயிகள் தங்கள் நிறுவனத்தில் முன் பணம் செலுத்தி ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கிச் சென்று வளர்த்தால் முட்டை மற்றும் வளர்ந்த கோழியை தாங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக விளம்பரம் செய்தது.
இதனை நம்பி பல ஆயிரம் விவசாயிகள் முன் பணம் செலுத்தி சுசி நிறுவனத்திடம் ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கிச் சென்று வளர்த்தனர். ஆனால் வளர்ந்த பின் அந்த கோழிகளையோ அதன் முட்டையையோ அந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளவில்லை.

இது பற்றி விவசாயிகள் அளித்த புகாரை அடுத்த சுசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருசாமி கைது செய்யப்பட்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் குருசாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 19 கோடி அபராதமும் விதித்து கோவையில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *