அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொடுத்து விட்டு, கார் ரேஸ் பந்தயத்துக்கு வெளிநாடு பறந்து விட்டார்.
இதில் முதலாவதாக வரப்போவது –விடாமுயற்சி. பொங்கல் அன்று வெளியாக இருந்த இந்த படம், தள்ளிவைக்கப்பட்டு, வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.அஜித் தவிர ,அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு /எ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த படத்துக்கு அஜித், ரூ.105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.அதே தொகையை ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் பெறுவார் என தெரிகிறது.
அடுத்த படத்துக்கு அஜித் ‘டிமாண்ட்’ செய்துள்ள சம்பளம் ரூ.200 கோடி.
தமிழில் இப்போது 200 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஒரே நடிகர் விஜய் மட்டுமே. ரஜினியின் சம்பளம் அதைவிட குறைவுதான்.
*
—