பிப்ரவரி -03,
தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் என ஐந்து விமான நிலையங்கள் உதாண் திட்டத்தின் கீழ்மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சேலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானப் போக்குவரத்து ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
நெய்வேலி மற்றும் வேலூரில் உள்ள மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து, அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன,.
ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான லம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன,
தஞ்சாவூரில் தேவையான அணுகு சாலை மாநில அரசு மூலம் வழங்கப்பட்டால் விமான நிலைய கட்டிட வேலைகள் தொடங்கப்படும்-
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேட்ட கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த பதிலை அளித்து உள்ளது,