நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் கல்யாண வாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை. 2007- ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக 2021- ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யா. நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததால் திரையுலகிலிருந்து சில காலம் விலகி இருந்தார். இப்போது சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
தற்போது ‘உலக பிக்கல் பால் லீக்’கில் போட்டியிடும் சென்னை சூப்பர் சேம்ப்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளார் சமந்தா. அந்தப் போட்டிகள் நடந்துவரும் நிலையில் சமந்தாவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.
இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், சமந்தாவும், சிட்டாடல் சீரியசின் இயக்குனர் ராஜ் நிதிமோரும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சமந்தா, ராஜ் நிதிமோருவை காதலிக்கிறாரா?” என்ற கேள்விகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் ‘டேட்டிங்’ செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. உண்மை என்ன ? அவர்களாக சொன்னால்தான் உண்டு.*