‘ சித்திரம் பேசுதடி’ படம் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின் . தரமான படம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சினிமா, அடுத்து மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படமும் அற்புதமான திரில்லர்.
‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘துப்பறிவாளன்’, ‘பிசாசு’, ‘சைக்கோ’ என அடுத்தடுத்து படங்கள் எடுத்த மிஷ்கின், பின்னர் தொடர் சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார்.
அண்மையில் படவிழா ஒன்றில் அவர் மது குடிப்பதை நியாயப்படுத்தி திருவாய் மலர்ந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் , அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவை ஒருமையில் விளித்தார்.
‘சிறந்த சினிமா படங்கள் எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜானு ஒருத்தன் இருக்கான்- அவன் மிகப்பெரிய போதை எனக்கு- பலரையும் குடிகரனாக மாத்தியது அவர்தானு வைச்சிக்கலாம்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல தரப்பினரும் அவரை விமர்சித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் மேடைகளில் சர்ச்சை கருத்துகள் சொல்வதை நிறுத்தவில்லை.
இப்போது, மனைவி, மகளை பிரிந்து மிஷ்கின் வாழ்ந்து வருகிறார்.
இது பற்றி அவர் கூறியது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சொன்னார் ?
‘’நான் என் மனைவியிடம் ஒருமுறை விவாகரத்து செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன் – அதற்கு அவர், முடியாது என்று சொல்லி அழுதுவிட்டார்- அதிலிருந்து, நான் விவாகரத்தை கேட்கவில்லை.- ஏனென்றால் எனக்கு அவரது நியாயமான எண்ணம் புரிந்தது- அதனால் நாங்கள் இருவரும் இப்போது தள்ளி நின்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நான் என் மகளை அவரிடம் கொடுத்துவிட்டேன். என் மகளிடம், ‘அம்மாவை நீ பத்திரமாக பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டேன்-
இப்போது நான், சினிமாவை கல்யாணம் செய்து கொண்டு விட்டேன்- எனக்கு மனைவி தேவையில்லை- எனக்கு சினிமா போதும். சினிமா மீதுள்ள காதலால்தான் மனைவியை பிரிந்தேன்’ என்று ,கொளுத்தி போட்டுள்ளார்,’ ‘சைகோ’ படம் எடுத்த மிஷ்கின்.