‘இளையராஜா ‘ படம் கை விடப்பட்டதா ? —

தமிழ் சினிமாவில் 70 களில், தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் இளையராஜா. ‘அன்னக்கிளி’ என்ற அவரது முதல் படமே நூறு நாட்களை தாண்டி ஓடி வசூல் குவித்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து யாரும் தொட முடியாத மிகப்பெரிய உயரத்தை
தொட்டவர்.

அவரது வாழ்க்கை வரலாறு ‘இளையராஜா’ எனும் பெயரிலேயே சினிவாக தயாராகிறது. இதில் தனுஷ், இளையராஜாவாக நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்துக்கு ராஜாவே இசை
அமைக்கிறார்.

ஆனால் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும்படம் தொடங்கப்படவில்லை. படம் குறித்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தாலும் அந்த படம் ‘டிராப்’ ஆகிவிட்டது என கோடம்பாக்கத்தில் செய்தி பரவ தொடங்கியது.

இப்போது ‘அந்தப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
படம் கை விடப்படவில்லை.
ஷுட்டிங்குக்கு முந்தைய வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போது, தனுஷ், நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
அனைத்துமே முடியும் தருவாயில் உள்ளன. அவற்றை முடித்து விட்டு, இளையராஜா படத்துக்கு கால்ஷீட் கொடுக்க உள்ளார்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *