‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’
திரைப்படம் கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது.
ரண்டாவது நாளில் ரூ.11 கோடி,
மூன்றாவது நாளில் ரூ.14 கோடி,
நான்காவது நாளில் ரூ.14 அளவிலும்
வசூலை ஈட்டியுள்ளது.
‘விடாமுயற்சி’, இந்திய அளவில் மட்டும்
முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட
ரூ.65 கோடி வசூலித்துள்ளது.
வெளிநாடுகளில் ,முதல் 4 நாட்களில்
ரூ.38 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் அஜித்தின்
‘விடாமுயற்சி’ ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக
திரை உலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின்
கதையை தழுவி எடுக்கப்பட்ட ,
இந்த படத்துக்கு அஜித், ரூ.120 கோடி
சம்பளம் பெற்றதாக தகவல்.
படத்தின் மொத்த பட்ஜெட்- பட்ஜெட் ரூ.200 கோடி.