‘உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும்வெள்ளிக்கிழமை காதலர் தினத்தன்று தமிழில் 11 சினிமாக்கள் ரிலீஸ் ஆகின்றன.
அவை :
‘2கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’, ‘பயர்’, ‘கண்ணீரா’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘வெட்டு’, ‘படவா’, ‘ அது வாங்கினால் இது இலவசம்’, ’தினசரி’ மற்றும் ’வருணன்’ .
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘டிராகன்’ ஆகிய படங்கள் காதலர் தினத்தில் வெளியாக இருந்தன.
ஆனால் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த 11 படங்களில் ‘2கே லவ் ஸ்டோரி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ ஆகிய படங்களை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
தமிழில் பதினொரு படங்கள் ஒரே
நாளில் வெளியாவது, இதுவே முதன்முறை என கோடம்பாக்கத்து ஆட்கள் பிரமிப்புடன்
சொல்கிறார்கள்.