தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 90 – களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகைசிம்ரன்.
ரஜினிகாந்த் ( பேட்ட), கமல்ஹாசன் ( பஞ்சதந்திரம் ) , விஜய் ( துள்ளாத மனமும் துள்ளும்), அஜித் ( வாலி) உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர்.
கல்யாணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆன சிம்ரன் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் சிம்ரன் லண்டனில் ஒரு ஓட்டலில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
திடீரென அந்த ஹோட்டல் நிர்வாகம் சிம்ரன் தங்கியிருக்க வேண்டிய காலக்கெடு முடிந்துவிட்டதாக கூறி ஓட்டலை விட்டு காலி செய்ய சொன்னார்கள்.அப்போது அவரது கணவர் டெல்லியில் இருந்துள்ளார்.
ஓட்டலில் இருந்து வெளியேறிய சிம்ரன் என்ன செய்வது என்று தெரியாமல் மணிக்கணக்கில் சாலையோரம் குழந்தைகளுடன் நின்றிருக்கிறார். பலருக்கு போன் செய்தும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. பிறகுதான் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு போன் செய்தார்.
அவர்தான்,தனது லண்டன் நண்பர்களுக்கு போன் செய்து சிம்ரனுக்கு தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார்.
–