“என்ன ஆயிற்று ஷங்கருக்கு என்று தெரியவில்லை.”- ரசிகர் குமுறல்.

இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரையரங்கில் சரியாக போகத நிலையில் இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஜென்டில் மேன், முதல்வன், அந்நியன், இந்தியன், காதலன் போன்ற ஷங்கரின் ஆகச் சிறந்தப் படங்களை கடந்த காலங்களில் பார்த்து அவர் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஓடிடியில் கேம் சேஞ்சர் படத்தைப் பார்த்ததும் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.

ஒவ்வொரு தேர்விலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவன் திடீரென மதிப்பெண் குறைந்துவிட்டால் அவன் மீது ஆசிரியருக்கு கோபம் தாங்காது. சுமாரான மதிப்பெண் வாங்கும் மாணவனை விட அவனை கடுமையாகத் திட்டச் செய்வார். அது போன்றுதான் ஷங்கர் மீதான விமர்சனமும் உள்ளது.

ரசிகர் ஒருவர் கேம் சேஞ்சர் பற்றி செய்துள்ள விமர்சனம் வாட்ஸ் அப்- ல் உலா வருகிறது.

“சமகால தமிழ் சினிமாவில், ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை நோ்த்தியாகவும் டெக்னிக்கல் அட்டகாசத்துடனும் உச்சபட்ச உழைப்புடனும் உருவாக்கும் இயக்குநர்களில் ஷங்கரையே எப்போதும் முதன்மையானவர் என்று நான் மதிப்பிடுவேன்”.

“சில போ் உடன்பட்டாலும் பல போ் திட்டினாலும், இதைத்தான் இத்தனை காலமாக நான் எழுதியும் சொல்லியும் வந்தேன்”.

“இந்தியன் 2 வந்த போது இந்த அபிப்பிராயம் ‘டமால்’ என இடிந்து தாறுமாறாக கீழே விழுந்தது”

“”சரி.. விடு மாப்ள.. யானைக்கு கூட பைல்ஸ் வரும். உக்கார முடியாம கஷ்டப்படும்’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான்”..

“அடுத்த வெடிகுண்டை கருணையே இல்லாமல் இறக்கியிருக்கிறார் ஷங்கர்”
“ஆம். ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை சற்று நேரம் பார்க்க ஆரம்பித்தேன்.”

“மணக்க மணக்க தஞ்சாவூர் சாப்பாடு சாப்பிட்டு பழகியவனை, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ‘ஆந்திரா மெஸ்’ஸில் கோங்குரா சட்னியுடன் அமர்த்தினால் எப்படியிருக்கும்?”

“அப்படியொரு கண்ணீர் தன்னிச்சையாக வழிந்தது. குண்டூர் மிளகாயின் நெடி தாங்கவில்லை. “

“தமிழ் ஆடியன்ஸின் பல்ஸை சரியாகப் புரிந்து கொண்டிருந்த ஷங்கர், அக்கட ஆந்திர தேசத்து மக்களின் டோனை ஏடாகூடமாகப் புரிந்து கொண்டாரோ அல்லது எக்ஸ்ட்ரா மசாலாவை தூவி விட்டு ஏமாற்றலாம் என்று நினைத்து விட்டாரோ”..

“நிற்க.. அதற்காக இந்தப் படத்தை படுமோசம் என்று சொல்ல மாட்டேன்”

“ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும் சரியாகவே கூடியிருந்தன. ஆனால் மிக்ஸிங்கில்தான் ஏதோ கொடூரமான பிரச்சினை. திடீரென்று ‘ஒரு நாள் முதல்வரை’ உள்ளே நுழைத்து ஏக களேபரம்”.

“காதலியைப் பார்த்தவுடன் ஓடிச் செல்லாமல் குந்த வைத்த பிள்ளையார் மாதிரி எல்லைக் கோட்டில் மாவட்ட கலெக்டர் நிற்பதற்கு சொன்ன லாஜிக் காரணத்தைக் கூட சகித்துக் கொள்வேன்ஞ

“ஆனால் சைடிலேயே நடக்கும் ஒரு காரெக்டரை வைத்து காமெடி என்கிற பெயரில் ஒன்றை செய்தீர்களே மிஸ்டர் ஷங்கர்.”

“என்ன ஆயிற்று ஷங்கருக்கு என்று தெரியவில்லை.”

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *