தேவயாணிக்கு திருமணம் நடந்தது எப்படி தெரியுமா ?

‘சில்க்’ ஸ்மிதா நடித்த ‘லயனம்’ எனும் பலான படத்தை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி.தனது ‘சூப்பர் குட்’ நிறுவனம் மூலம் இந்தப்படத்தை தயாரித்த அவர் , பிறகு தமிழ் சினிமாக்களை தயாரிக்க தொடங்கினார்.

சவுத்ரி, முதன் முதலாக தயாரித்த தமிழ்படம் ‘புது வசந்தம்’ சுப்பிரமணியன் என்ற .உதவி இயக்குநர் தன் பெயரை விக்ரமன் என மாற்றிக்கொண்டு டைரக்டு செய்த படம். ஆம். விக்ரமன் இயக்கிய முதல் படம்தான், சவுத்ரிக்கும் முதல் தமிழ் படம்.

‘புது வசந்தம்’ சவுத்ரிக்கும்,விக்ரமனுக்கும் புதிய வசந்தமாக அமைந்தது. 1990 ஆம் ஆண்டு வெளியான ‘புது வசந்தம்’ படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

புதிய மன்னர்கள், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். கோகுலம், உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், விஜய்க்கு திரையுலகில் முக்கிய படமாக அமைந்த பூவே உனக்காக படத்தையும் இயக்கியிருந்தார்.

பிற கம்பெனிகளுக்கு தொடர் வெற்றிப்படங்களை தந்த விக்ரமன், நீண்ட காலத்துக்கு பிறகு சூப்பர் குட் நிறுவனத்துகாக இயக்கிய படம் ‘சூர்யவம்சம்’. ஹீரோ சரத்குமார், இந்த படத்தில், சக்திவேல், சின்ராசு ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.

தேவயானி, ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் உண்டு. அப்பா – மகன் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது.

சூர்யவம்சம் படம் தயாராகும்போதே விஜய் நடிப்பில், லவ் டுடே படத்தையும் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வந்தார். பாலசேகரன் இயக்கினார்.

சூர்யவம்சம் படம் ரிலீசுக்கு தாயராக இருந்த நிலையில், படத்தை பார்த்த பலர், ‘’ இந்த படம் ஓடாது- நாட்டாமை அளவுக்கு இல்லை’ என சவுத்ரிக்கு பயம் காட்டினர். அவரும் நம்பி விட்டார்.

இதனால் சூர்யவம்சம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த ஆர்.பி.சௌத்ரி, விஜயின் ‘லவ் டுடே ‘படத்தை ரிலீஸ் செய்தார். 1997 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி லவ்டுடே படம் வெளியானது.

அதன்பிறகு, 48 நாள் கழித்து, ஜூன் 27 ஆம் தேதி சூர்யவம்சம் படம் வெளியானது. தாமதமாக வெளியானாலும் சூர்யவம்சம் படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் லவ்டுடே படத்தை விட, சூர்யவம்சமே அதிக வசூலை செய்தது.

இந்த தகவலை அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல.. நடிகை தேவயானியின் கணவர்.
சூர்யவம்சம் படத்தில் நடிக்கும் போதுதான் ராஜகுமாரன் –தேவயானி இடையே காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *