‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி அதிரடி வெற்றி பெற்றது. உலக அளவில் 650 கோடி ரூபாய் வசூலை அள்ளியது .
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
‘ஜெயிலர்’ இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக உள்ளது.சன் பிக்சர்ஸ் – ரஜினி- நெல்சன் – அனிருத் கூட்டணி 2 ஆம் பாகத்திலும் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஜப்பானில் ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.அந்த நாட்டில் ரஜினிக்கு திரளான ரசிகர் கூட்டம் உண்டு.
கடந்த 1998 ஆம் ஆண்டு ரஜினியின் `முத்து’ திரைப்படம் ஜப்பானில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
‘டான்சிங் மகாராஜா ‘ என்ற பெயரில் வெளியான முத்து திரைப்படம் செய்த வசூல் சாதனையை எந்த இந்திய திரைப்படத்தாலும் பல ஆண்டுகள் நெருங்க முடியவில்லை.
அண்மையில் தான் பாகுபலி ,முத்து வசூலை முறியடித்தது.
ஏற்கனவே ஜெயிலர் , திரைப்படம், முதல் ரிலீசின்போது, 33 கோடிரூபாயை சர்வதேச நாடுகளில் வசூலித்துள்ளது.அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி இருந்தது.
—