மகேஷ்பாபுவின் ‘பான் வேர்ல்டு’ படத்தில் பிரியங்கா சோப்ரா , வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாக்கள்தான் ‘பான் இந்தியா’ எனும் பிம்பத்தை உடைத்தவர் , எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது தெலுங்கு படங்களான பாகுபலிகளும், ஆர்.ஆர்,ஆர். படமும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, தமிழ்,இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’செய்யப்பட்டு உலகம் முழுக்க திரையிடப்பட்டன.
‘பான் இந்தியா ‘படம் என்ற அடையாளத்தையும் பெற்றது.
ராஜமவுலி , இப்போது ‘ பான் வேர்ல்டு’ படத்தை உருவாக்கும் சாகச முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்த தெலுங்கு படத்தில் அங்குள்ள ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இருவரும் கை கோர்க்கும் முதல் படம் –இது.
ராஜமவுலிக்கு வழக்கமாக கதை –திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத் , இந்த கதையை எழுதியுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்தப்படத்துக்கு இசை அமைக்கிறார். ‘பான் வேர்ல்டு’ படம் என்பதால் உலகின் பல நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
முதல் கட்ட ‘ஷுட்டிங்’ அமேசான் காடுகளில் நடந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
முக்கிய கேரக்டரில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியில் கோலோச்சிய இவர், இப்போது ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
விஜய் ஜோடியாக, தமிழன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து புத்தம் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியங்கா சோப்ரா,இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் 2027 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டும் வெளியாகிறது.
படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்.
இந்த படம் தொடர்பான மேலும் புதிய செய்திகளை ஐதராபாத்தில் இரண்டாம்’ கட்ட படப்பிடிப்பு ‘ முடிந்தது, ராஜமவுலி வெளியிட இருப்பதாக தகவல்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கென்யாவில் நடக்கிறது.
—