கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பெரும்பாலான
திரைப்படங்கள் தோல்வி கண்டன.தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவதால் , தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுவதாக கூறிய, தயாரிப்பாளர்கள், ஜுன்1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அன்று முதல் எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். நடிகர்கள் ஊதியத்தை குறைக்க வேண்டும், கேளிக்கை வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.
சினிமா ‘ஸ்டிரைக்’ குறித்து விவாதிக்க மலையாள நடிகர்கள் சங்க அவசர கூட்டம் நேற்று கொச்சியில் நடந்தது.மோகன்லால், சுரேஷ்கோபி, சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு , தங்கள் ஆதரவு கிடையாது’ என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
‘
‘இந்த வேலை நிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – இந்த ‘ஸ்டிரைக்’ மலையாள சினிமாவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்- ஒரு சிலர் மட்டுமே வேலை நிறுத்தம் செய்ய விரும்புகிறார்கள்’ என நடிகர்கள் சங்க கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ‘ஸ்டிரைக்’ நடந்தே தீரும்’ என தயாரிப்பாளர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
இரு தரப்பும் பிடிவாதமாக இருப்பதால்,மலையாள சினிமா உலகம், நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
—