‘ராஜாராணி ‘சினிமா மூலம் இயக்குநராக அறிமுகமான
-அட்லீ, தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்தார். இதனை அடுத்து இந்திக்கு சென்றார்.அங்கு ஷாருக்கானை வைத்து இயக்கிய ’ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இது-
இந்திக்கு சென்ற தமிழ் டைரக்டர்கள் யாரும் செய்யாத
சாதனை.
இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
அட்லீ இயக்கத்தில் சல்மான்கான் நாயகனாக நடிக்கவிருப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. அந்தப்படத்தில் இன்னொரு நாயகனாக ரஜினி அல்லது கமலை நடிக்கவைக்க அட்லி முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இருவருமே அட்லீயின் அழைப்பை நிராகரித்தனர்.இதனால் அந்தப்படம் கைவிடப்பட்டது.
சல்மான் கானுக்கு தயாரான கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க இப்போது ஒப்ப்புக் கொண்டுள்ளார். அட்லீ கதையை சொன்னதும், அல்லு அர்ஜுன் ஓகே சொல்லி விட்டார்.
அந்த இன்னொரு நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது பீரியடு படம் ஆகும். 3 கதாநாயகிகள்.