ரஜினிகாந்துக்கும் , ஸ்ரீதேவிக்கும் ‘மூன்று முடிச்சு’ முக்கியமான படம். அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி இந்தப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்துபோன ரஜினிகாந்த், மூன்று முடிச்சு படத்தில்தான் முழுமையாக வந்தார். படத்தை தூக்கி நிறுத்தியதே இவர்தான்.
வில்லனாக அதில் கலக்கிய ரஜினி, பின்னார் ஹீரோவானார். ரஜினியும்,ஸ்ரீதேவியும் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். எல்லாமே வெற்றிப்படங்கள்.
ப்ரியா, போக்கிரிராஜா, ராணுவவீரன், தர்மயுத்தம், ஜானி,போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.
ஸ்ரீதேவியுடன் தொடர்ந்து நடிக்கும்போது அவரை காதலிக்க தொடங்கிய ரஜினிகாந்த், ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் கை கூடவில்லை. ரஜினி, நடிகர் மகேந்திரனின் உறவுப்பெண் லதாவை கல்யாணம் செய்ததும், இந்தியில் கொடி நாட்டிய ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்ததும், ஊர் அறிந்த விஷயம்.
எனினும், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் இடையே மரியாதை எப்போதும் நீடித்தது. ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது, ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அவர் குணமடைய ஸ்ரீதேவி 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
இதனால் ஸ்ரீதேவி மீது கடைசிவரை தனி மதிப்பு வைத்திருந்தார், ரஜினி.
ஸ்ரீதேவி மரணம் அடைந்தபோது ரஜினி அதிர்ந்து போனார்.
‘ஸ்ரீதேவியின் இறப்பு என்னை மிகவும் கவலையடைய வைத்துள்ளது -நான் ஒரு அன்பான தோழியை இழந்துவிட்டேன்- என் இதயம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறது. அவர்களுடன் நான் வலியை பகிர்ந்து கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார், ‘சூப்பர் ஸ்டார்’.
—-