‘கேடி ‘ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்
நடிகை தமன்னா.
இங்கு முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, ‘பாலிவுட்’டுக்கு சென்று அங்கும் கொடி நாட்டினார்.
இப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் தொடரில் நடித்தபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தது..
மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில்,தாங்கள் ஒன்றாக எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு வந்தனர்.
தமன்னா விரைவில் விஜய் வர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இப்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக விஜய் வர்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் தமன்னா.இப்போதெல்லாம் தமன்னா, தனியாகவே விழாக்களுக்கு சென்று வருகிறார்.
சினிமாவை விட ‘வெப்’தொடர்களில் நடிக்கவே அவர் ஆர்வம் காட்டுகிறார்.
–