கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுடன் நடிக்க நடிகை மறுப்பு.

‘கோடி ரூபாய் தந்தாலும் வடிவேலுவுடன் மட்டும் நடிக்க மாட்டேன் ‘ என கவர்ச்சி நடிகை சோனா சொல்லி இருப்பது கோடம்பாக்கத்தில் புயலை கிளப்பியுள்ளது..

2001 ஆம் ஆண்டு அஜித் ஹீரோவாக நடித்து வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.

தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே சோனா தோன்றி வந்தார்.

‘ பத்து பத்து ‘என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப்படம் சரியாக ஓடவில்லை. இதனால் சோனா, மீண்டும் கிளாமருக்கு தாவினார்.

சில்லுனு ஒரு காதல், ரோஜா, உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இப்போது வெப் தொடரில் நடித்து வருகிறார்.

அண்மையில் சோனா , நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசினார். அவருடன் இணைந்த நடித்த நகைச்சுவை நடிகர்கள் குறித்து கேட்கப்பட்டது. எல்லா நடிகர்களையும் புகழ்ந்தவர், வடிவேலு குறித்த வினா எழுப்பியபோது முகம் சுழித்தார்.

குசேலன் படத்தில் வடிவேலு- சோனா ஜோடியின் காமெடிக்கு தியேட்டரில் நல்ல ‘ரெஸ்பான்ஸ் ‘ இருந்தது. அது குறித்து கேட்டபோது , ‘ வடிவேலு குறித்து பேச வேண்டாம்’ என முற்றுப்புள்ளி வைத்தார்.

கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர் பிறகு பேச ஆரம்பித்தார்.
‘வடிவேலு என்ற பெயரை சொன்னாலேயே , அவருடன் நடித்தவர்கள், கழுவி கழுவி ஊற்றுகிறார்கள் – மற்றவர்கள் போல் அதையே நானும் செய்ய விரும்பவில்லை.

குசேலன் பட ரீலீசுக்கு பிறகு வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் வந்தன – நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

கோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்- பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர, வடிவேலுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன்’’ என்று சோனா ஆவேசமாக சொன்னார்.

அவரது பேட்டியின் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. வடிவேலு குறித்து சோனா இப்படி சொல்ல என்ன காரணம் ? ‘குசேலன் ‘படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது ? என்பது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

வடிவேலு பதில் சொன்னால்தான் விவரம் தெரியும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *