‘எம்புரான் ‘ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது.
2019- ஆம் ஆண்டு மோகன்லால், நடிப்பில் வெளியான படம் லூசிபர். அவருடன் மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், டவினோ தாமஸ், , உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நடிகர் பிரிதிவிராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
6ஆண்டுகளுக்கு பிறகு லூசிபர் படத்தின் 2 ஆம் பாகம் – ‘ எம்புரான் ‘ என்ற பெயரில் உருவாகி உலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆனது.
பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்திலும், மோகன்லாலுடன் டவினோ தாமஸ், மஞ்சுவாரியார் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஆனாலும் வசூலில் குறைவில்லை.
கேரளாவில் இந்த படம் வரலாற்று சாதனையாக 750 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அங்கு மட்டும் நேற்று ஒரே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் .
உலக அளவில் எம்புரான் திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்.
வார இறுதியில் 80 கோடி ரூபாய் வசூலை எட்டி விடும் என்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.
மலையாளத்தை தவிர மற்ற மொழிகளில் இந்தப்படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லையாம்.
—