‘மின்னலே ‘படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் , ஹாரிஸ் ஜெயராஜ்.இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்று இவரது இசையும் தனித்துவம் மிக்கவை.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில் நுட்பம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் இது:
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். திறமையான பாடகர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்தாமல் இறந்த பாடகர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்.
அந்த பாடகர்கள் எல்லாம் கொண்டாடப்பட்டு நல்ல இசையை மக்களுக்கு கொடுத்த பின்பே இறந்துள்ளனர். அவர்களது குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக கொண்டு வராமல் அவர்களது பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்’ என்று ஹாரீஸ் தெரிவித்தார்.
—