காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரவிழா – யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் 13-ஆம் நாள் நிறைவு விழாவாக யானை வாகனத்தின் மீது எழுந்தருளி உலாவந்த ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி‌ உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலியோடு அனுதினமும் காலை,இரவு நேரங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

விழாவின் நிறைவாக 13-ஆம் நாளில் ஏகாம்பரநாதர் யானை வாகனத்தின்மீது எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதே போல் ஏலவாழ்குழலி அம்மை சப்பரத்திலும் எழுந்தருளினார். மின் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் வாகனங்களில் மின்விளக்குகளினால் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏகாம்பரநாதர் பாடல்கள் ஒலித்தவாறு ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வலம் வந்து அற்புதமாய் காட்சியளித்தன.

மேள தாளங்கள், கிராம இசைகள் முழங்க,சிறுவர்- சிறுமியினரின் சிலம்பாட்ட குழுவினரால் கலை நிகழ்ச்சிகளோடு வலம்வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மையாரையும் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இப்பிரம்மோற்சவத்தின் இறுதியாக சாமி வலம்வந்த பின் திருக்கோவிலினை அடைந்த நிலையில் சிவச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்திலிருந்து திருக்கொடியானது இறக்கப்பட்டது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக நிறைவாக 108 சங்காபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *