இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.
இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
முன்னதாக விசிக எம்பி ரவிக்குமார், இன்று தனது ட்விட்டர் பதிவில், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் நாளை இந்திய அரசு பொது விடுமுறையாக உடனே அறிவிக்கவேண்டும். 2022 இல் பொது விடுமுறை அறிவிப்பு ஏப்ரல் 4 ஆம் தேதியே வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஆன பிறகும் கூட அறிவிப்பு வெளியிடப்படாதது ஏன்? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14 ஆம் நாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.