சென்னை ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி தொடர்பாக ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விசாரணையின் போது 1749 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்
இந்தப் பணப்பரிமாற்றம் யார் , யாருக்கு நடைபெற்று உள்ளதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த மைக்கேல் ராஜ் கடந்த மாதம் 29 ஆம் தேதி துபாய்க்கு தப்பி செல்ல முயன்றபோது சென்னையில் கைது செய்யப்பட்டவர். அவரிடம் நடத்தப்பட்டஏழு நாள் விசாரணை முடிவடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியும் வெளிநாட்டில் இருந்து கொண்டு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்துவதுக் குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.